1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒரே பாலின தம்பதிகளை ஆசீர்வதிக்க கத்தோலிக்க பாதிரியார்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்க, பாப்பரசர்

பிரான்சிஸ் முடிவு செய்துள்ளார்.

கடவுள் அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதையே இது காட்டுகிறது என்று வெளிநாட்டு செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், சம பாலினத் தம்பதிகளை ஆசீர்வதிக்க பாதிரியார்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் அதிகாரம் அளித்துள்ளார்.

உலகில் உள்ள சமபாலினச் சமூகத்திற்கு இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், சமபாலின தம்பதிகளை ஆசீர்வதிப்பதில் பாதிரியார்கள் சில நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டுமென்றும் அதன்படி, தேவாலயத்தின் தினசரி சடங்குகளில் பங்கேற்காத தம்பதியர்களுக்கு மட்டுமே பாதிரியார்கள் ஆசீர்வதிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கத்தோலிக்க திருச்சபையானது திருமணத்தை ஒரு சாதாரண பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையிலான செயலாகவே தொடர்ந்து கருதவும் முடிவு செய்துள்ளது.

பாப்பரசரின் இந்த புதிய முடிவு, கடவுள் அனைவரையும் சமமாக ஏற்றுக்கொள்கிறார் என்பதை காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாப்பரசரின் சொந்த நாடான அர்ஜென்டினா மக்களும் இந்த முடிவை சமத்துவமின்மைக்கு எதிரான துணிச்சலான முடிவு என்று விளக்குகிறார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி