1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க போட்டியிடுவாரா, இல்லையா என்ற விவகாரம், கடந்த சில நாட்களாக அரசியலில்

ஆர்வமுள்ள பலரிடையே பேசப்பட்டது. ஜனாதிபதி விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று, விமல் வீரவன்ச எம்பிதான் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். அதன்பின்னர் அந்தக் கேள்வி எல்லோரையும் பற்றிக்கொண்டது.

எவ்வாறாயினம், ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக. ஜனாதிபதி அறிவித்து முடிந்தாகிற்று. ஆனால், ஜனாதிபதி விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தீர்மானத்தை, குறைந்தபட்சம் அவரது கட்சியைச் சேர்ந்த ருவன், சாகல, வஜிரவுக்குக்கூட சொல்லாமல், அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தின்போது சொல்ல என்ன காரணமென்று, அனைவரும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனராம்.

திங்கட்கிழமை நடந்த அந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜனாதிபதியின் அறிவிப்பை அடுத்து, அக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் சிலர் இதுபற்றி முனுமுனுக்கத் தொடங்கியுள்ளனர்.

“மொட்டுக் கட்சியின் வேட்பாளராக தம்மிக பெரேராவை களமிறக்குவதென்ற செய்தியால் தலைவர் களவரப்பட்டுள்ளார் போன்றுதான் எனக்குத் தோன்றுகிறது” என, அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். “இல்லை, தம்மிகவின் செய்தி பொய், அது நாமலின் சூழ்ச்சி. தம்மிகவின் பிரச்சாரத்தை நாமல்தான் செய்கிறார். ஆனால், அவ்வாறானதொரு முடிவுபற்றி, கட்சிக்குள் இதுவரை பேசக்கூட இல்லை. இப்படியொரு யோசனை முன்வைக்கப்பட்டால், மொட்டுக்குள் இருப்பவர்களும் விலகிச் சென்றுவிடுவர்” என்று, மொட்டின் இளம் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

“இல்லை இல்லை. தம்மிகவின் கதையை ஜனாதிபதி சீரியஸாக எடுக்கமாட்டார். ஜனாதிபதிக்குத்தான் ஆதரவு வழங்குவதாக, மஹிந்த, ஷிரந்தி ஆகியோர் வாக்குறுதியளித்துள்ளனர்” என்று, மற்றுமொரு எம்பி தெரிவித்துள்ளார். “இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லையா என்று, உயர்ஸ்தானிகர்கள் சிலர் தலைவரிடம் கேட்டுள்ளனர். அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கும்.

“இல்லை, ரணில் போட்டியிடமாட்டார் என்று, சம்பிக்க தரப்பும் பிரச்சாரமொன்றை முன்னெடுக்கிறது. ரணில் வராததால் சம்பிக்கவை நிறுத்துவோமென்று சந்திரிகாவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளார். அதுபற்றிக் கேள்விப்பட்டாரோ தெரியவில்லை” என்று, மற்றுமொரு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“அன்று காலை பிரசன்னவும் நிமலும்தான் ஜனாதிபதியைச் சந்தித்தார்கள். அப்போதுதான் இதுபற்றி கூறப்பட்டதாம். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் தேர்தல் பற்றி அறிவிப்போம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று, மேலுமொரு அமைச்சர் கூறியுள்ளார்.

“அன்று காலை பிரசன்னவும் நிமலும்தான் ஜனாதிபதியைச் சந்தித்தார்கள். அப்போதுதான் இதுபற்றி கூறப்பட்டதாம். அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் தேர்தல் பற்றி அறிவிப்போம் என்று அப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று, மேலுமொரு அமைச்சர் கூறியுள்ளார்.

அப்போது, “போட்டு வாங்கும் வேலையைத் தலைவர் செய்திருப்பாரோ” என்று, சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். “ஆம், அதுவும் இருக்கலாம்” என்று, இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த ஐந்தாறு அமைச்சர்களும் ஒரேயடியாக ஒத்துக்கொண்டார்களாம். அந்த அமைச்சர்களின் கதைகள் அவ்வாறு இருந்தாலும், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சாரப் பணிகள், வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கு சாகலவினால் ஏற்கெனவே ஒப்படைக்கப்பட்டுள்ளதாம். தேர்தல் பணிகளுக்காக, ஜனவரி முதலாம் திகதிமுதல் ஐதேகவின் தலைமைச் சபையும் நிறுவப்படவுள்ளதாம்.

இதற்கிடையில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறு நாமல் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஜனாதிபதி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்றும் தெரியவருகிறது.

“நாடாளுமன்றத்தில் ஜனாதிபதித் தேர்தல்பற்றி கூறும்போது, குறிப்பிட்ட காலத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என்று எம்பிக்களுக்கு உறுதியளித்திருக்கிறேன். அந்த வாக்குறுதியை மீற என்னால் முடியாது” என்று, ஜனாதிபதி நேரடியாகவே தெரிவித்துவிட்டாராம்.

இப்போதுதான் கதை தெளிவாகிறது அல்லவா? பொதுத் தேர்தலைப் புறக்கணித்ததால்தான் தம்மிக தொடர்பான பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாமலின் Game தனி Game ஆகவே இருக்கிறது. ராஜபக்ஷ குடும்பமும் அப்படித்தான். ஒரு தரப்பினர் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறுகின்றனர்.

நாமல் தரப்பு அந்த வாக்குறுதியை உடைத்துவிட்டு, வேறு திட்டங்களில் செயற்படுகிறது. இவையனைத்தும் அவர்கள் பேசித் தீர்மானித்துவிட்டுதான் செய்கிறார்களா? எவ்வாறாயினும், அரசியலில் இவையனைத்தும் சாதரண விடயங்கள்தால். அதிகாரத்துக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி