1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையை பூர்வீகமாக கொண்ட காமடி நடிகர் போண்டா மணி. நேற்று இரவு காலமானார். இவரின் மரணம் தொடர்பாக தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி, பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிகர் வடிவேலுவுடன் இவர் நடித்த காமடிகள் மிக பிரபலம். சமீப காலமாக வடிவேலு டீமில் இருக்கும் பலருக்கு வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

அவர் பார்ம்அவுட் ஆனதால் அவருடன் நடித்த பலருக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இதனால் சிலர், அன்றாட உணவிற்குகூட கஷ்டப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. பலர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில்தான் காமடி நடிகர் போண்டா மணி, பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்துள்ளார். அவருக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. காமடி ரோல்கள் எதுவும் பெரிதாக கிடைக்கவில்லை. திரைப்படங்கள் தவிர சில சின்னத்திரை தொடர்களிலும் அவர் நடித்தார். சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரின் மரணத்தில் தொடக்கத்தில் சந்தேகம் நிலவியது. திடீரென அவரின் மரணத்திற்கு என்ன காரணம், பின்னணியில் என்ன நடந்து இருக்கும் என்று விசாரணைகள் செய்யப்பட்டன.

அவருக்கு 2 சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு கிட்னி கல் பிரச்சனை இருந்துள்ளது. அதுவே மோசமாகி கிட்னி செயல் இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. ஒரு கிட்னி பாதித்த நிலையில் இன்னொரு கிட்னியும் மோசமான நிலையை அடைந்து உள்ளது. இதற்கு அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில்தான் நேற்று இரவு தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

அவர் அடிக்கடி டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று முதல் நாளே அவருக்கு உடல்நிலை மோசமாகி உள்ளது. அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லும் அவர் இன்று மருத்துவமனையில் அட்மிட் ஆகலாம் என்ற திட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் அவருக்கு மயக்கம் ஏற்படவே, சம்பவ இடத்திலேயே அவர் பலியாகி உள்ளார். இது இயற்கையான மரணம் என்று மருத்துவர்கள் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தாலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் போண்டா மணி. 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன்பிறகு ஏராளமான திரைப்படங்களில் அவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நடித்த அவரது காட்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி