1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கட்சியின் நிறைவேற்றுக்குழு தீர்மானித்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தான் தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா

சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

“நாடு வங்குரோத்தடைந்தமைக்கு யார் காரணம் என்பதை நீதிமன்றம் தெளிவான பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவ்வாறிருகையில் அவர்களின் பின்னால் செல்வதா அல்லது நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் சுதந்திர கட்சியுடன் இணைந்து செயற்படுவதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

“உத்தேச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொறுத்தமான வேட்பாளரை சுதந்திர கட்சி தக்க சமயத்தில் களமிறக்கும். கட்சியின் நிறைவேற்றுக்குழுவே அந்த தீர்மானத்தை எடுக்கும். அதற்கமைய நிறைவேற்றுக்குழு என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், களமிறங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன்” என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவிக்கையில், “சுதந்திர கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் நிலைப்பாடு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதாகவே காணப்படுகிறது” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி