1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே

திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிறிஸ்மஸ் பண்டிகை நீண்ட விடுமுறையில் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்புக்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி