1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கதிர்காம ஆலயத்தில் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் 38 பவுண் தங்கத் தகடு பூசகருக்கு சொந்தமானது என்பதால் அதனை

தான் எடுத்துக் கொண்டதாக இன்றையதினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்த வரலாற்று சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணை அதிகாரிகள் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இவ்வாறு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக காணாமல் போயிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் சோமிபால டி. ரத்நாயக்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் இன்று (27) காலை 7.30 மணியளவில் சரணடைந்தார்.

இதன்போது, சந்தேகநபரான பூசகர் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை மணிநேரம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன. பின்னர், சந்தேகநபரான பூசகர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார்.

சந்தேகத்திற்கிடமான கதிர்காமம் ஆலய பிரதான கப்புறாளை ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

கதிர்காம ஆலயத்தில் காணாமல் போன 38 பவுன் தங்கத் தகடு திருடிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான கதிர்காமம் ஆலயத்தின் பிரதான கப்புறாளை( கைது செய்யபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, இன்று (27) காலை கதிர்காமம் ஆவாலயத்தின் பிரதான கப்புறாளை சோமபால டி.ரத்நாயக்க கொழும்பிலுள்ள குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

"கதிர்காமம் ஆலயத்திற்கு பக்தர் ஒருவரால் காணிக்கையாக வழங்கப்பட்ட 38 பவுன் தங்கத் தகடு காணாமல் போனதை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொது சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான கதிர்காமம் தேவாலயத்தின் பிரதான பாதுகாவலர் சோமிபால டி.ரத்நாயக்க காவல்துறையினரால் தேடப்பட்டார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (26) இவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தாரினால் காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.

அதில் அவர் தனது மக்களுடன் வீட்டிலிருந்து வெளியேறியதாகவும் அதிலிருந்து அவரைப்பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவரது குடும்பத்தார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இவ்வாறிருக்கையில் அவர் இன்று (27) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் சரணடைந்துள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்பட்டு மூன்று மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது." என தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்கத் தட்டை திருடியதாக சந்தேகித்து 'சூட்டி கபுவா' எனப்படும் கதிர்காமம் ஆலயத்தின் கப்புறாளை ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அண்மையில் கைது செய்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி