1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

க்ரிக்கெட் பிரச்சினையால், ரொஷானைப் போன்றே சஜித்தும் மண்ணைக் கௌவிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஐமசவினால் புதிதாக

அமைக்கப்படவுள்ள கூட்டணியின் பிரதித் தலைமைப் பதவி கிடைக்குமென்று எண்ணியிருந்தாலும், அதுவும் இப்போது கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமையே காணப்படுகிறது.

விளக்கமாகச் சொல்வதாயின், கொண்டம் போல் வேலையை வாங்கிவிட்டு, கொமடுக்குள் போட்டுவிட்ட நிலைமைதான் ரொஷானுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரொஷானும் ஆட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அவர் புதிதாகக் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளாரென்று தெரியவருகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எதிர்பார்ப்புடன் அக்கட்சி தனது பிரச்சாரத்தை ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது. எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதியன்று, நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

பொலன்னறுவையின் மாவீரன் ரொஷான் அப்படி விளையாடத் தயாராக இருக்கின்றபோது, ​​பொலன்னறுவை மண்ணிலிருந்து உதித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வருவதாக, புத்தளத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபையில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படுமென்றும் அதன்போது தனது பெயர் முன்மொழியப்பட்டால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதுதான் எஞ்சியிருந்தது, இப்போதும் அந்தக் குறையும் பூர்த்தியாகிவிட்டது. போற போக்கில், இம்முறை பொலன்னறுவையிலிருந்து மாத்திரம் இரு வேட்பாளர்கள் களமிறங்கப் போகிறார்கள்போலத் தெரிகிறது. இன்னும் போகப் போக யார்யார் வருவார்களோ தெரியவில்லை!

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி