1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இந்த வருடத்தின் முதல் நாளில் எங்களின் பொக்கெட்டுகள் எவ்வாறு கரையப் போகின்றன என்பது தொடர்பில் முகநூல் பக்கம் ஒன்றில்

வெளியான விவரங்களை அப்படியே மீள்பதிவு செய்கிறோம்.

இன்றைய விலை ஏற்றம் எப்படி இருக்கும் என்பதன் விளக்கம் அதுதான்:

# எரிபொருள்கள் விலை 12 வீதத்தால் அதிகரிக்கின்றது.

# குறிப்பாக 92 ரகப் பெற்றோலின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது.

# 95 ரகப் பெற்றோல் விலை 35 ரூபாவினால் உயருகின்றது.

#  டீசல் விலை ரூபா 40 ரூபாவினால் அதிகரிக்கின்றது.

# சமையல் எரிவாயு விலை 16 வீதத்தால் அதிகரிக்கின்றது. அதாவது 12.5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவால் அதிகரிக்கின்றது.

# பஸ் கட்டணம் 15 வீதத்தினால் அதிகரிக்கின்றது.

# அதாவது குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூபா 35 ஆக உயருகின்றது.

# ஓட்டோக் கட்டணம் இரண்டாவது கிலோமீற்றருக்கு கட்டணம் ரூபா 10ஆல் அதிகரிக்கின்றது.

# pickme – Uber கட்டணங்கள் 20 வீதத்தால் அதிகரிக்கின்றன.

# மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாத போதும் ளுழடயச Pயநெடள 20 வீதத்தால் அதிகரிக்கின்றது.

# நீர்க் கட்டணம் குறைந்தது 3 வீதம் அதிகரிக்கின்றது.

# தபால் கட்டணம் குறைந்தது 7 வீதத்தால் கூடுகின்றது.

# அழைப்புக் கட்டணம், இணையச் சேவைக் கட்டணம், கட்டணத் தொலைக்காட்சி சேவைக் கட்டணம் போன்ற அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கின்றன.

# மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ரூபா ஒரு இலட்சத்தினால் அதிகரிக்கின்றது.

# மொபைல் போன் விலைகள் 35 வீதம் அதிகரிக்கின்றன.

# மொபைல் போன் நாளை முதல் ரூபா 135,000 ஆக அதிகரிக்கின்றது.

# நகை மற்றும் தங்க விலைகள் 20 வீதத்தால் அதிகரிக்கின்றன.

# சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கின்றது.

# சாதாரண தேநீர் விலை 5ரூபாவாலும் அதிகரிக்கின்றது.

# சோறு மற்றும் கொத்துரொட்டி பார்சல் விலை 25 ரூபாவால் அதிகரிக்கின்றது.

# பேக்கரி பொருள்களின் விலைகள் ரூபா 5 முதல் ரூபா 15 வரை அதிகரிக்கின்றன.

# இது போதாதென்று மரக்கறி விலைகள் உச்சத்தை தொட்டு இருக்கின்றன.

# குறிப்பாக பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூபா 2,400 ஆக உயர்ந்துஇருக்கின்றது.

# சிவப்பு வெங்காயம் ஒரு கிலோ ரூபா 600 ஆக உயர்ந்து இருக்கின்றது.

# முட்டை ரூபா 50 ஆக இருக்கிறது.

(காலைமுரசு)

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி