1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே-மியுங், இன்று (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு சென்றிருந்த போது

அடையாளம் தெரியாத ஒரு நபர் அவரது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார்.

புதிதாக கட்டப்பட இருக்கும் விமான நிலையத்தை சுற்றிப்பார்க்க லீ ஜே-மியுங் பூசானுக்கு சென்றிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் லீ ஜே-மியுங்கின் இடது கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார். அந்த தாக்குதலை நடத்தியவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார்.

தாக்குதல் நடத்தியவர், லீயின் பெயர் பொறிக்கப்பட்ட காகித கிரீடத்தை அணிந்திருந்த 50 அல்லது 60 வயதுமதிக்கத்தக்க நபர் ஆவார்.

ஆதரவாளர்கள் மற்றும் செய்தியாளர்களின் கூட்டத்திற்கு மத்தியில் லீ ஜே-மியுங் நின்று கொண்டிருந்த போது, இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அப்போது, ஆட்டோகிராப் பெற வேண்டும் என்று கூறி அவரை நெருங்கிய அந்த அடையாளம் தெரியாத நபர், லீ ஜே-மியுங்கின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

எனவே, அந்த சம்பவத்தின் போது, செய்தியாளர்கள் எடுத்த விடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவரால் கத்தியால் குத்தப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசுவதைக் காட்டுகிறது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, லீ ஜே-மியுங் உடனடியாக மருத்துவ கவனிப்புக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி