1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரத்தை பிரிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பொருளாதாரத்தை சரியான திசையில்

செலுத்துவதற்கு மக்கள் விரும்பாத தீர்மானங்களை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“தமிழ்க் கட்சிகளுக்கிடையில் நிலவும் முரண்பாடுகளால் தமிழ் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஆனால், தமிழ் மக்கள் எம்முடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகவுள்ளனர். வடக்கு விஜயத்தின்போது இதனை நான் புரிந்து கொண்டேன். எனவே, தமிழ் மக்களையும் அரவணைத்துக்கொண்டு நாட் டைக் கட்டியெழுப்புவோம். அதேவேளை, அரசின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் இணைந்து பயணிக்குமாறு எதிரணியில் இருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு மீண்டும் அழைப்பு விடுகின்றேன்” என்றும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை அறிவித்தார்.

“நாட்டின் சகல துறைகளிலும் அபிவிருத்தி ஏற்பட வேண்டும். இந்த அபிவிருத்தியில் தமிழ் மக்களின் பங்களிப்பு முக்கிய இடம் வகிக்க வேண்டும். இன, மத, மொழி வேறுபாடின்றி அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் அரசியல் தீர்வுக்கான பயணமும் தடையின்றி தொடரும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு கடந்த வியாழக்கிழமை வடக்குக்கு வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளார். வடக்கு விஜயத்தின்போது அவர், அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்து ரையாடல்களை நடத்தியிருந்தார். இந்நிலையில், வடக்கு விஜயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களை இன்று சந்தித்துள்ளார். இதன்போது, ஜனாதிபதியின் ஓவியமொன்றும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. வடமாகாணத்தில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை அதிபர்ரணில் விக்ரமசிங்க சந்தித்து கௌரவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழில் நேற்றைய தினம் (07) நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே சாதித்தவர்களை ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் சாதித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பளுதூக்கல் வீரன் புசாந்தன், கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி அக்செயா அனந்தசயனன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை மாணவி ஜெரால்ட் அமல்ராஜ் வனிஷ்கா, வாகனத்தை தாடியால் இழுத்து சாதனை புரிந்த செல்லையா திருச்செல்வம் உள்ளிட்ட பலரையும் ஜனாதிபதி சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

அதன்போது, கல்வி, விளையாட்டு, நாடகம் மற்றும் திரைப்படக் கலை, சமூக ஊடகங்கள் போன்ற பல துறைகளில் திறமை செலுத்தியோர் கலந்துகொண்டதோடு அவர்களுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி