1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்போதைய மின் கட்டணத்தை குறைக்க உத்தரவிடுமாறு கோரி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால், உயர் நீதிமன்றத்தில்

அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின் வளத்துறை அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஷியாமலி அத்துகோரல ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.

மனுவைத் தாக்கல் செய்த பின்னர், அது தொடர்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, “தான்தோன்றித்தனமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து நாட்டு மக்களை வதைக்கும் ரணில் - மொட்டு அரசுக்கு விரைவில் முடிவு கட்டுவோம்” என்று சூளுரைத்தார்.

"மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன. எனவே, தற்போதுள்ள மின் கட்டணத்தைக் குறைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியே இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்” என்றும் அவர் கூறினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி