1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பெருந்தோட்ட மக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விரைவில் தீர்வு காணப்படும் என தொழில் மற்றும்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான பணிப்புரைகளை தமக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமான கடந்த 18ஆம் திகதி, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவை வழங்குமாறும், தமிழ் ஊடகங்கள் மூலம் பணியாற்றக்கூடிய அலுவலகம் ஒன்றை வழங்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, பிராந்திய அலுவலகம் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஆரம்பமாகி 7 நாட்களுக்குள் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (07) திறந்துவைத்து உரையாற்றும் போது, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தான் நுவரெலியாவுக்கு வந்தபோது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை பாடியதையும், யாழ்ப்பாணம் சென்ற போது தமிழில் தேசிய கீதத்தை பாடியதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த நிகழ்வில் காட்டப்பட்ட காணொளிகளில் 95 வீதமானவை தமிழில் ஒளிபரப்பப்பட்டதாக சிங்களம் மட்டுமே தெரிந்தவர்களிடம் மன்னிப்பும் கோரினார். ஆனால், நாட்டில் நடக்கும் அனைத்தையும் சிங்கள மொழியில் மட்டும் செய்ததற்காக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

சிங்களத்தை அரச கரும மொழியாக்கி மக்களைப் பிளவுபடுத்திய அரசியல்வாதிகள் அனைவரும் சபிக்கப்படுவார்கள் என தெரிவித்த மனுஷ நாணயக்கார, அந்த பிரிவினையின் காரணமாக இன்று தமிழில் கொஞ்சமும் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வரலாற்றைக் குற்றச்சாட்டுவதை விடுத்து எதிர்காலக் குழந்தைகளுக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் வடிவேல் சுரேஷின் கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர், இம்மாத இறுதிக்குள் அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதி அறிவிப்பார் என தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி