1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பிரான்சுக்கான அடுத்த பிரதமராக இளம் வயது அரசியல்வாதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவல்

மேக்ரானால் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளவர், கேப்ரியல் அட்டால் (Gabriel Attal, 34) என்ற இளம் வயது அரசியல்வாதி ஒருவர் ஆவார்.

இந்நிலையில், பிரான்ஸ் வரலாற்றில், இவ்வளவு இளம் வயதில் பிரதமராக தேர்வு செய்யப்பட்ட முதல் நபர் இவர் ஆவார். குறித்த நபர், பத்து வருடங்களுக்கு முன் சுகாதார அமைச்சகத்தில் ஆலோசகராக இருந்ததோடு, 2017ஆம் ஆண்டு மேக்ரான் தேர்தலில் வென்றபோது, கேப்ரியல் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

அத்தோடு, திறம்பட நாடாளுமன்றத்தில் வாதாடும் கேப்ரியல், மேக்ரானின் கவனத்தை ஈர்த்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. 29 வயதில், கல்வித்துறையில் ஜூனியர் அமைச்சரான கேப்ரியலுக்கு, 2020 இல் பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மேக்ரான் மீண்டும் அதிபராக பதவியேற்றபோது, சிறிது காலம் பட்ஜெட் அமைச்சராக இருந்த கேப்ரியலுக்கு, கடந்த ஜூலை மாதம் கல்வித்துறை கையளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் அணியும் அபயாவுக்கு எதிதிராக அவர் நடவடிக்கை எடுத்தபோது, எடுத்த விடயத்தில் உறுதியாக நிற்கும் கேப்ரியலின் உறுதி, மேக்ரானுக்கு தெரியவந்தது.

ஆனால், அவை மட்டுமே மேக்ரான், கேப்ரியலை பிரதமராக தேர்வு செய்யக் காரணம் என்றும் கூறிவிடமுடியாது. ஏனென்றால், இதற்கு முன் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன், வெறும் 20 மாதங்கள் மட்டுமே பதவியில் நீடித்தார். இந்நிலையிலேயே, பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பிரபலமான கேப்ரியலை அந்த இடத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

மேலும், ஜூன் மாதம் ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதோடு பிரான்ஸ் அரசை தேர்தலுக்கு வழிநடத்தும் பொறுப்பு கேப்ரியலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி