1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுதந்திர தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை என்ற கருத்தாக்கத்தை அடையாளமாக மாற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டுக்குள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட யுத்தம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் நூற்றாண்டு நினைவேந்தல் நிகழ்வில் நேற்று (09) கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலக வளாகத்தில் அமைந்துள்ள பொன்னம்பலம் அருணாசலம் சிலைக்கு முன்பாக நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

பொன்னம்பலம் அருணாசலம் அவர்கள் உருவாக்கிய இலங்கைக் கருத்தை முன்னெடுத்துச் செல்வதே அவர்களுக்குக் காட்டப்படக்கூடிய உயரிய மரியாதை என ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முன்முயற்சியில் கூட்டுப் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு செலுத்தும் உயரிய அஞ்சலி என வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், சேர் அருணாச்சலத்தின் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

sirP1.jpg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி