1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது எனத்

தீர்ப்பளிக்கக் கோரி தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அவர்களினால் இந்த மனு முன்வைக்கப்பட்டுள்ளது. அதில், சட்டமா அதிபர் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“பயங்கரவாத எதிர்ப்பு வரைபு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தில் உள்ள விதிகளின்படி யாரையும் கைது செய்து காவலில் வைக்கும் அதிகாரத்தை காவல்துறை மற்றும் கடலோர காவல்படைக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்படும் நபர்களை தன்னிச்சையாக தடுத்து வைக்கும் அதிகாரம் பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டிருந்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி