1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வரலாற்றில் முதன்முறையாக, ஒரு கிலோகிராம் கெரட்டின் மொத்த விற்பனை விலை, இரண்டாயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளதென்று,

பேலியகொட மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பேலியகொடை மொத்த விற்பனை நிலையத்துக்கு, கெரட் உற்பத்திகள் கொண்டுவருவது குறைந்துள்ள நிலையிலேயே, கெரட் விலை அதிகரித்துள்ளதென்று, வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, கெரட் அறுவடை குறைவடைந்துள்ளமையே, இந்த விலை அதிகரிப்புக்குக் காரணமென்று தெரியவந்துள்ளது.

நுவரெலியா விஷேச பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 1,700 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும் தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில் 1,500 ரூபாயாகக் காணப்படுகிறது என்றும், அநுராதபுரத்தில் கெரட்டின் விலை 2,000 ரூபாயாகக் காணப்படுகிறதென்றும் தெரியவருகிறது.

இந்த விலைக்கேற்ப, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுளு்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விலை 1,100, போஞசி 1,200 என்ற அடிப்படையில், பேலயகொட மொத்தச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக, அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

தவிர, ஒரு கிலோகிராம் கோவா – 700, லீக்ஸ் – 450, தக்களி – 400, தேசிக்காய் – 200, வெங்காயத்தாள் - 350 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 400 ரூபாய்க்கும் ஒரு கிலோகிராம் சின்ன வெங்காயம் 350 ரூபாய்க்கும், ஒரு கிலோகிராம் கிழங்கு 170 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தம்புத்தேகம பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் போஞ்சி மற்றும் பச்சைமிளகாய் ஆகியவற்றின் விலைகள், ஆயிரம் ரூபாய் வரை அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், பேலியகொட பொருளாதார மத்திய நிலையத்தினூடாக மரக்கறி கொள்வனவு செய்யவரும் சில்லரை வியாபாரிகளின் எண்ணிக்கை இந்நாட்களில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி