1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தற்பொழுது கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று

வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி பி திசாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைக்கு அமைய துமிந்த சில்வா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச துமிந்தவிற்கு பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

எனினும், பொது மன்னிப்பு வழங்கப்பட்டமை சட்டரீதியானதல்ல என நேற்றைய தினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் துமிந்த சில்வா ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

துமிந்தவின் உடல் நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையை கோர உள்ளதாகவும், அவர்கள் பரிந்துரைத்தால் துமிந்த சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார் எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, துமிந்த சில்வா விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, தன் தந்தை விவகாரத்தில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

2011ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் தீர்மானம் தன்னிச்சையானது என்று உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. அத்துடன், குறித்த தீர்மானம் சட்டத்துக்குப் புறம்பானது என்றும் தீர்ப்பளித்துள்ளது. இது தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

"இது தனிமனித வெற்றியல்ல, முழு நாட்டின் வெற்றி, உண்மை ஒரு நாள் நிச்சயம் வெல்லும்"டிஎன்றும் அவர் குறிப்பிட்டார்.

"கோட்டாபயவின் முட்டாள்தனமான தீர்மானத்தை உயர்நீதிமன்றம் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமன்னிப்பு அதிகாரத்தை எதிர்கால ஜனாதிபதிகள் துஷ்பிரயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சிறந்த எடுத்துக்காட்டு" என்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி