1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் மறைந்த பிரதமர் எஸ் டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 125ஆவது பிறந்தநாள்

நினைவேந்தல் நிகழ்வு, அண்மையில் காலி முகத்திடலிலுள்ள அவரது சிலைக்கு முன்பாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் நடைபெற்றது. பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.

அன்று மைத்திரியும் சந்திரிகாவும் சிநேகபூர்வமாக உரையாடுவதை ஊடகங்களில் காணமுடிந்தது. ஆனால் அங்கு அரசியல் விவாதம் எதுவும் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த வருடங்களில் சந்திரிகாவும் மைத்திரிபாலவும், பண்டாரநாயக்கா சிலைக்கு இருவேறு சந்தர்ப்பங்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கும் இடையில் மீண்டும் ஒருவித நட்புறவு உருவாகி வருவதாக டாலி வீதியில் உள்ள சுக தலைமையகத்தைதச் சேர்ந்தோர் தெரிவித்துள்ளனர். சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு சந்திரிகாவிடமிருந்து பச்சைக்கொடி கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 8 ம் திகதி பண்டாரநாயக்கவின் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதற்கு முன்னர் மைத்திரி கொழும்பு நீதிமன்றத்துக்குச் சென்றார். மைத்திரி மற்றும் கட்சியின் பதில் செயலாளர் சாரதி துஷ்மந்த ஆகியோர் மீது தாக்கல் செய்த முறைப்பாட்டினை பரிசீலிப்பதற்காக நடைபெற்ற வழக்கில் கலந்துகொள்ளவே சென்றிருந்தார்.

இந்த வழக்கு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி, இலங்கையின் பதில் செயலாளரின் செயற்பாடுகளில் தலையிடுவதற்கும், செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதற்கும் கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி சந்துன்விதான தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த முடிவு குறித்து மைத்திரி முழு மகிழ்ச்சியில் இருக்கிறார். கட்சி தலைமையகத்திற்கு சென்ற மைத்திரி, சாரதியை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பின், கட்சி நிர்வாகிகள் சபையின் தொடக்கத்தில் பேசுகையில், “தயாசிறி 3வது முறையாக தோற்றார். எனவே, தற்காலிக பொதுச் செயலாளர் இனி சுதந்திரமாக தனது பணியைத் தொடரலாம்” என்று மைத்திரி கூறினார்.

சாரதி துஷ்மந்தவை கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக மத்திய குழுவில் அங்கீகரித்திருப்பதால், அது நிறைவேற்று சபையிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த தேர்தலில் பொது வேலைத்திட்டத்தின் கீழ் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற தீர்மானத்தையும் அக்கட்சி நிறைவேற்றியது. கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி எவ்வாறு நியமிக்கப்பட்டார் என்பது குறித்து மைத்திரி உருக்கமான உரையை நிகழ்த்தினார்.

தயாசிறியை செயலாளராக ஆக்கிய போது கட்சியின் சிரேஷ்டர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும், தான் தயாசிறிக்கு செயலாளர் பதவியை வழங்கியதாக தெரிவித்தார். தனக்குத் தெரியாமல் தயாசிறி என்ன செய்தார் என்பது குறித்து மைத்திரி நீண்ட விளக்கமளித்தார். “கூட்டணி அலுவலகத்தின் மேல் தளம் திலங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரிடம் இன்னும் சாவி உள்ளது. கட்சித் தலைவரிடம் சொல்லாமல் அவர் எப்படி அதைச் செய்யமுடியும் என, மைத்திரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஷானின் விலகல் குறித்து மைத்திரி மிகவும் சென்சிட்டிவாகப் பேசியுள்ளார். "நான் ஷானுக்கு என்ன கொடுக்கவில்லை? வெளிநாடு செல்லும்போது அவரை பதில் தலைவராக்கினேன். கட்சி கொடுக்கக்கூடிய அனைத்தையும் ஷானுக்கு கொடுத்தேன். ஷான், மைத்திரி தனக்கு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டபோது நடந்த சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

ஷானுக்கு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டாம் என ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்தவிடம் கூறினர். அப்போது மஹிந்த என்னிடம் கேட்டார். அப்போது நான் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தேன். ஷான் இல்லாமலேயே முதலமைச்சராக வரக்கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள் என்றேன். அதனால் ஷானுக்கே கொடுக்கலாம் என்றேன். நான் சொன்னதால் மகிந்த ஷானை மீண்டும் முதலமைச்சராக ஆக்கினார்.

ஷான் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதை மைத்திரி தொடர்ச்சியாக விளக்கியுள்ளார். நிறைவேற்று சபையின் பின்னர், மைத்திரியினால் கட்சியின் மத்திய குழு அழைக்கப்பட்டது. ஷான் விஜயலால் மற்றும் தயாஷ்ரித திசேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்திருந்தது. கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவி குறித்து விரைவில் முடிவெடுக்குமாறு, திலங்க மற்றும் அமரவீரவுக்கு மைத்திரி பரிந்துரைத்துள்ளார்.

செயலகப் பிரச்சினையை இனியும் இழுத்தடிக்கக் கூடாது என மத்திய குழு தீர்மானித்திருந்த போதிலும், திலங்கவுக்கும் அமைச்சர் நிமல் சிறிபாலவுக்கும் இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மைத்திரியின் நண்பர்களுக்கு இதன்போது ஒரு பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. அது, மைத்திரிக்கு நெருக்கமான ஒருவரைப் பற்றியது.

புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் முன்னாள் ஆளுநர் பேஷல ஜயரத்னவின் உறவினருமான ஒருவர், தற்போது மைத்திரிபாலவுடன் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றார். சுக மற்றும் மைத்திரி பற்றிய அனைத்து தகவல்களையும் பேஷல ஜயரத்னவிடம் வழங்குவதே மைத்திரியின் நோக்கம் என அவரது நண்பர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். விஷேடமாக மிக நுணுக்கமாக திட்டமிட்டு இந்த நபர் மைத்திரிக்கு அருகில் நடப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய லங்கா சுதந்திரக் கட்சியில் உள்ளவர்களை மைத்திரிக்கு நியமித்து அவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் இந்த நபர் செயற்பட்டு வருவதாக மைத்திரியின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ரணிலையோ சஜித்தையோ ஆதரிக்காத புதிய கூட்டணியை உருவாக்க, சுகவின் சிலர் முனைப்பு காட்டியதாகவும் ஒரு கதை உண்டு. ஏற்கனவே பல இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

“இரண்டு மாதங்களாக பொருத்தமான சகோதர கட்சிகளைத் திரட்டி வருகிறேன். கடந்த இரண்டு வாரங்களில், அந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. மேலும் இரண்டு குழுக்கள் விவாதிக்க வாய்ப்பு கேட்டன. கட்சித் தலைவர்களும் ஆர்வமாக உள்ளனர்" என்று, புதிய கூட்டணி குறித்து, மைத்திரி சூசகமாக கூறினார். அந்தக் கலந்துரையாடல்களுக்கு தேவையான பின்னணியை மியுரு பாசித லியனகே செய்துவருவதாக அறியமுடிகிறது.

அண்மைய நாட்களில், சந்திரிக்கா மற்றும் மைத்திரிபாலவுக்கு இடையில் இரண்டு முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, எதிர்வரும் சில வாரங்களில் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி நியமிக்கப்படுவார் என டாலி வீதியிலுள்ள சுக தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னராவது சுதந்திரக் கட்சி காப்பாற்றப்படுமா என்று பார்ப்போம்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி