1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வழமை போன்று, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், மலலசேகர மாவத்தையில் உள்ள நாமல்

ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இதில், மொட்டுக் கட்சியைச் சேர்ந்த சில முதியவர்களும் கலந்துகொண்டதாக வதந்தி பரவியுள்ளது. இக்கூட்டத்தின்போது, கட்சியை விட்டுச்சென்றவர்கள் குறித்தே அதிகம் பேசப்பட்டுள்ளது.

“மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேறிய ஒரு சிலர், மீண்டும் இணைந்துகொள்ளக் கேட்கின்றனர்” என்று, அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். "ஆம், அவர்களைப் பற்றி நாம் பார்க்க வேண்டும். ஏனென்றால், அந்த சுயேச்சை எம்பிக்களில் சிலர் மீண்டும் எங்களுடன் இணைந்து செயல்படத் தயாராக உள்ளனர்" என்று, மற்றொரு எம்பி கூறினார்.

“ஆம், அதுமட்டுமின்றி கட்சித் தலைவர்கள் தொடர்பிலும் பார்க்க வேண்டும்.  ஜீஎல் மற்றும் டலஸ் ஆகிய இருவரும், எங்கள் கட்சியுடன் இருக்க வேண்டிய தேசிய தலைவர்கள் என்று, நான் அன்றே சொன்னேன்” என்று நாமல் கூறினார். “ஆம், அவர்களுடன் பேசலாம் அல்லவா?” என்று, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்டார். “ஆமாம், கட்சிக்காக நிறைய கஷ்டப்பட்ட சீனியர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எங்களுடன் இருப்பது பெரும் பலம்'' என்றார் நாமல்.

"ஆம், அவர்களுடன் விவாதிக்க வேண்டும்" என்று இராஜாங்க அமைச்சர் ஒருவர கூறியபோது, “ஆமா, போன எல்லாரையும் கூப்பிடுவோம்” என்று இன்னோர் எம்பி குறிப்பிட்டுள்ளார். “ஆமாம், சும்மா அவர்களை அழைக்க முடியாது. சுயேட்சையாக மாறிய எம்பிக்கள், கட்சித் தலைவர்களுடன் தனித்தனியாகப் பேச வேண்டும். அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புகிறேன்” என்றார் நாமல்.

“ஆம், அது நல்ல ஐடியா” என்று எல்லோரும் இணங்கினர். “எந்தப் பிரச்சினை இருந்தாலும், கஷ்ட காலத்தில் அவர்கள் எங்களோடு இருந்தார்கள்” என்று நாமல் குறிப்பிட்டார். “இவர்களெல்லாம் மஹிந்தரால்தான் நாடாளுமன்றத்திற்கு வரமுடிந்தது. அந்த நாட்களில் நீங்கள் அனைவரும் மகிந்தவின் புகைப்படங்களுடன் வாக்களிக்கச் சென்றதை நாம் பார்த்தோம். சரியான அழைப்பிதழ் இருந்தால் மீண்டும் கூட்டிச் செல்லலாம்” என்று, மொட்டின் சிரேஷ்டர் ஒருவர் தெரிவித்தார்.

“ஆம், அடுத்த வாரத்தில் இருந்து அனைத்து சுயேச்சைக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்பிக்களை நான் தனிப்பட்ட முறையில் சந்திப்பேன். மீண்டும் சந்திக்கவும் எங்களுடன் இணையவும் உங்களை அழைக்கிறோம்'' என்று நாமல் அழைத்தார். அது மாத்திரமன்றி, சுயேச்சை எம்பிக்கள் யாரையும் தாக்குவதில்லை எனத் தீர்மானம் எடுத்துள்ளனர்.

அந்தக் கதைகளில் உள்ள உண்மை மற்றும் பொய் எதுவாக இருந்தாலும், அந்த சுயேச்சை எம்பிக்கள் அனைவரும் பெசிலுக்கு எதிரானவர்கள். நாமலின் நடத்தை குறித்தும் கவலையடைந்துள்ளார். எனவே நாமலின் முயற்சி எந்தளவுக்கு பலன் தரும் என்பது சந்தேகமே.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி