1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யப்படும் பட்சத்தில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்து

இலட்சியப் பயணத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக தலைமைக்கான வேட்பாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில் கருத்துத் தெரிவித்திருந்த போதே, அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருந்ததாவது,

“பாரம்பரிய கட்சியான இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைமைக்கு வாக்கெடுப்பு மூலமாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளமையானது உட்கட்சி ஜனநாயகத்தினை உறுதிப்பத்துவதாக உள்ளது.

“அத்துடன், வடக்கு, கிழக்கு மட்டுமல்ல தென்னிலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கும் முன்னுதரணமாக இருக்கும் வகையில் வாக்கெடுப்பின் மூலமாக தலைமைத் தெரிவு நடைபெறவுள்ளது.

“முன்னதாக, கட்சியின் தலைமைத்தெரிவானது, இணக்கப்பாட்டின் அடிப்படையில் நடைபெறவேண்டுமென சிரேஷ்ட உறுப்பினர்கள் எதிர்பார்த்தார்கள். அதனடிப்படையில் பேச்சுக்களை முன்னெடுத்தபோதும் வேட்பாளர்கள் இடையே இணக்கப்பாடுகளை எட்டியிருக்க முடிந்திருக்கவில்லை.

“இவ்வாறான நிலையில், தற்போது வாக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தலைமைத்தெரிவானது இடம்பெறுகின்றது. இதன் மூலமாக வெற்றி அடைந்தவர், தோல்வி அடைந்தவர் என்ற நிலைமைகள் தோற்றம்பெற்று கட்சிக்குள் அக முரண்பாடுகள் வலுத்துவிடும் என்று பல்வேறு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

“உண்மையில் கட்சியின் தலைமைத்தெரிவு என்பது உட்கட்சி விவகாரம். அத்துடன் கட்சியின் அங்கத்தவர்கள் தமக்கான தலைவரை நேரடியாக வாக்களித்து தெரிவு செய்யப்போகின்றார்கள். இதனால் எவ்விதமான குழப்பங்களும் ஏற்படப்போவதில்லை.

“என்னைப் பொறுத்தவரையில், தலைமைக்கான தேர்தலில் வெற்றி தோல்வி என்பதற்கு அப்பால் எமது இட்சியப்பயணத்துக்கான அனைவரையும் ஒன்றிணைத்த செயற்பாடுகள் தொடரும். அந்த வகையில், கட்சியின் தலைமைக்கான தேர்தலால் எந்தவிமான பின்னடைவுகளும் ஏற்படப்போவதில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியில் நடைபெறவிருந்த தலைமைத்துவ தேர்தல், கட்சியை பிளவுபடுத்தும் என்கிற அச்சம் நிலவுவதாக கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில அறிவும் சட்ட புலமையும் தலைமைத்துவத்திற்கான மேலதிக தகமையாக கருத தேவையில்லை என்றும் மக்களை ஈர்க்கக் கூடியதும் பிரிந்த தமிழ் சமூகத்தை ஒன்றிணைத்துச் செல்லக்கூடிய தலைமையே தற்போது தேவை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “கட்சியின் பெரும்பான்மையான தொண்டர்கள் சிறீதரன் தலைவராக வருவதையே விரும்புகின்றனர். சுமந்திரனின் தோல்வி கட்சிக்குள் ஏற்படுத்தும் பிளவுகளை விட சிறீதரனின் தோல்வி கட்சி தொண்டர்களிடையே பாரிய விரிசலை ஏற்படுத்தும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி