1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திடம் நிதியில்லை என்றால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும்

என இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பிலே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் கொழும்பில் நேற்றையதினம்(22) இரண்டு மணிநேரம் முக்கிய சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தூதரகத்தின் அழைப்புக்கிணங்க இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் மேற்படி சந்திப்பில் பங்கேற்கவில்லை.

இம் மூன்று தலைவர்களும் கலந்துகொள்ளாமைக்கான காரணங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவித்தல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி