1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நாடாளுமன்றத்தில் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்த விவாதத்தில் வெளியிட்ட

கருத்துக்களை நிராகரித்துள்ள ஆசிய இணைய கூட்டமைப்பு, நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் அதன் தற்போதைய வடிவத்தில் முன்னெடுக்க முடியாது என்றும் இலங்கை டிஜிட்டல் பொருளாதாரத்தின் சாத்தியமான வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீட்டினை பாதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

உலகின் மிகவும் வலுவான இணைய தொழில்நுட்ப நிறுவனங்களை உள்ளடக்கிய அமைப்பே ஆசிய இணைய கூட்டமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பு ஆசிய பிராந்தியத்தில் இணையம் தொடர்பான விடயங்களிற்கு தீர்வை காண ஊக்குவிக்கவும் முயல்கின்றது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்களை நிராகரிக்கவும் பதிலளிக்கவும் விரும்புகின்றோம் என ஆசிய இணைய கூட்டமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஜெவ்பெய்ன் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தினை முன்னெடுக்கும் செயற்பாடுகளின் போது நாங்கள் வழங்கிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அமைச்சரின் உரை அங்கீகரிக்கவில்லை. எங்கள் அமைப்பு பரிந்துரைகளை முன்வைத்திருந்ததுடன் சிங்கப்பூரில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பிரதிநிதிகளை சந்தித்திருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலத்தை தற்போதைய வடிவத்தில் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் இலங்கையின் மின் பொருளாதாரத்தில் பாயும் நேரடி முதலீடுகளும் பாதிக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Google, Apple, Meta, X (Twitter), Amazon, Yahoo, Booking.com, FedEx, Pinterest போன்ற முக்கிய நிறுவனங்கள் Asian Internet Allianceஇல் உறுப்பினர்களாக உள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி