1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி), நாட்டுக்கும் மக்களுக்குமான வேலைத்திட்டத்தை முன்வைக்காமல், வி.ஐ.லெனின் பற்றிப்

பேசுவதில் அர்த்தமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பிக்கு பேச மட்டுமே தெரிகிறது என்றும் அவற்றால் எந்தப் பயனுமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தெரிவித்துள்ள முன்னாள் எம்.பி, “மக்கள் விடுதலை முன்னணியினர், வாய்ப்பேச்சில் மாத்திரம்தான் வீரர்களாகக் காணப்படுகின்றனர். அதனால் எந்தப் பயனுமில்லை. இலக்கை அடைவதற்கும் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும், நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பணியாற்ற வேண்டும். அது இலகுவான விடயமல்ல. வி.ஐ.லெனின் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதால் நாட்டுக்கும் மக்களுக்கும் எந்தப் பயனுமில்லை. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அவர்கள் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டத்தை ஜே.வி.பியினர் முன்வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நாடு வீழ்ச்சியடைவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவோ காரணமல்ல என்றும் குறிப்பிட்டுள்ள ரவி கருணாநாயக்க, அனைவரிடத்திலும் தவறு இருக்கிறதென்றும் நாட்டைக் கட்டியெழுப்பி, மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமாயின், சரியான பொருளாதாரக் கொள்கையொன்று அவசியம் என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர், ரவி கருணாநாயக்க, வட் வரியின் இலாபம், மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தைச் சரியான பாதையில் கொண்டுசெல்லும் ஜனாதிபதி, வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றாரென்றும், அவர் மேலும் தெரிவித்தார்.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி