1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் புதிய கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன

முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரின் பெயர்கள், தலைமைத்துவ சபைக்கு முன்மொழிந்துள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய கூட்டணிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அதன் செயலகம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினை காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற பெயரை ‘கதிரை” சின்னத்தில் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன ஐக்கிய முன்னணி, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணியின் பல முன்னாள் கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி