1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இடைநிறுத்தப்பட்ட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மீண்டும்

ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தகவலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையின் காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் வரை இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை 15, 2024 பெப்ரவரி 15 முதல் மீண்டும் ஆரம்பமாக உள்ளது.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான கடல்சார் உறவுகள் இரு நாடுகளுக்கிடையில் திட்டமிடப்பட்ட பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதன் மூலம் புத்துயிர் பெறவுள்ளதாக அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் பல்வேறு காரணங்களால் இடைநிறுத்தப்பட்டது.

எனினும் புதுப்பிக்கப்பட்ட முயற்சிகளின் அடிப்படையில் இந்திய அரசாங்கத்தின் ஒப்புதலுடன் இந்த கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஆரம்பிக்கும் இந்த சேவையில், இறுதியாக சேவையில் ஈடுபட்ட செரியாபானி கப்பல் ஈடுபடாது எனவும் சிவகங்கை என்ற கப்பலே அந்த சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கப்பலில் 150 பயணிகள் பயணிக்கமுடியும் என தெரிவித்த அவர் ஒரு பயணி 60 கிலோவினை கொண்டு செல்லமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சேவையில் ஒரு வழிப் பயணத்துக்கு 80 அமெரிக்க டொலர், அதாவது 6 ஆயிரத்து 600 இந்திய ரூபாய், இலங்கை ரூபாவாக 26 ஆயிரம் அறவிடப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி