1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவேன் என முன்னாள் பிரதி

அமைச்சர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால ஆகியோர் விலக தீர்மானித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் 'த லீடர்' கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் அமைச்சர் மஹிந்த அமரவீர நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அமைச்சர் அமரவீர முதலில் மனுவை வாபஸ் பெற வேண்டும் அதன் பின்னர் தீர்மானம் எடுப்பதாகவும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயற்குழு கூட்டம், நேற்று முன்தினம் (29) பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. அக்கட்சியின் சின்னமாக 'நாற்காலி' அடையாளத்துடன் கூடிய பரந்த கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசியலமைப்பில் திருத்தம் செய்து புதிய அதிகாரிகள் சபையை நியமிக்க தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இங்கு 03 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இது தொடர்பில், கலந்துரையாடலின் நிறைவில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

“பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்று சபையை அதாவது கதிரையின் அடையாளத்துடன், ஐக்கிய முன்னணி என ஒரு பரந்த அமைப்பு உருவாக்கப்படுகிறது. பல அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் நுழைய ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கேற்ப யாப்பை திருத்த வேண்டும். அந்த யாப்பு திருத்தத்தை நாங்கள் எங்கள் கட்சி தலைமையகத்தில் செய்வோம். யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு வாரத்திற்கு பின்னர் ஐக்கிய முன்னணிக்கு புதிய அதிகாரிகள் சபை நியமிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது 'வெற்றிலை' சின்னம் விஷயத்தில் வழக்கு உள்ளது. அதனால் அதைப் பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளது. மஹிந்த அமரவீர மற்றும் திலங்க சுமதிபால, தங்களது பதவிகளை ராஜனாமா செய்து, எங்களிடம் ஒப்படைப்பதாகக் கூறினார்கள். வழக்கு தொடர்ந்த இருவரும் ராஜினாமா செய்தபின்னர், வெற்றிலை கூட்டணியில் இணைய எதிர்ப்பார்த்திருக்கிறோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி