1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவுக்கு பின்னர் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே.ஜகத் பிரியங்கர

தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டதுடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 

2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 நாடாளுமன்ற ஆசனங்களை வென்றதுடன், விருப்புரிமைப் பட்டியலில் சனத் நிஷாந்த முதலிடம் பிடித்தார்.

இந்நிலையில், ஏனைய நால்வராக பிரியங்கர ஜயரத்ன, அருந்திக பெர்னாண்டோ, சிந்தக அமல் மாயாதுன்ன மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் அக்கட்சியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இதன்படி, சனத் நிஷாந்தவின் மரணத்தினால் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கு ஜகத் பிரியங்கரவுக்கு வாக்காளர் தெரிவின்படி உறுப்புரிமை உள்ளதுடன், விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் புத்தளம் மாவட்டத் தலைவராக செயற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

1.jpeg

 

2.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி