1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பெலியஅத்தவில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில்

ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸ் பரிசோதகர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றைய நபர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் ஓய்வுபெற்ற கடற்படை வீரர் (39) எனவும் விசாரணைக் குழுக்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் கம்புருபிட்டிய நகரில் ஜீப்பில் இருந்து இறங்கி, மாத்தறை நோக்கிச் செல்லும் பேருந்தில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட ஒரு வாரத்தில், விமான நிலையத்தினூடாக அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு உதவியதற்காக, 21 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் பல்லேவல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் ஓய்வுபெற்ற கடற்படை வீரரின் மனைவியும் தந்தையும் (72) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் தங்கியிருப்பதாக நம்பப்படும் இரண்டாவது சந்தேகநபர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸ் பரிசோதகர் என்றும் அவர், கொஸ்கொட சுஜீயுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பொலிஸ் இன்ஸ்பெக்டரே, ஐந்து பேர் கொண்ட இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் என புலனாய்வுக் குழுவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி 5 பேர் கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் இந்த முன்னாள் காவல் ஆய்வாளர்தான் என விசாரணை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப் வண்டியை இவரே ஓட்டிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு கேமரா காட்சிகள் மற்றும் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காண முடிந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1983ஆம் ஆண்டு பிறந்த இவரது பெயர் ரன்முனி மகேஷ் ஹேமந்த டி சில்வா. இவர் மகந்தானை, ஊரகஸ்மன்ஹந்திய - புவக்கஹவத்த பகுதியைச் சேர்ந்தவர் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவர் கடந்த 2007ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார். அவர் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தார்.

இந்த நபர், கொஸ்கொட சுஜி மற்றும் அவரது பிரதான சீடரான உரகஹா மைக்கேல் ஆகியோரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல குற்றச்செயல்களுக்கு உதவியவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த குற்றவாளிகளுடன் இணைந்து குற்றங்களில் ஈடுபட்டதால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி