1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல், சிறைச்சாலை வைத்தியசாலையில்

அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, இன்று (03) மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைத்தியரின் பரிந்துரையின்பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் பெப்ரவரி 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மோசடிக் குற்றச்சாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இன்றைய தினம் காலையில் மாளிகாகந்தை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் தரமற்ற மருந்துப் பொருட்கள் இறக்குமதி மூலம் அரசாங்க நிதி பாரியளவில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இந்த மோசடி நடைபெற்றிருந்தது.

இந்நிலையில் அவரை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் லோசனா அபேவிக்கிரம உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜானக சந்திரகுப்த உள்ளிட்ட ஆறுபேர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி