1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இழந்த இறையாண்மையை மீட்டெடுக்கக் கூடிய தேசிய சுதந்திரப் போரின் தேவை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 நாட்டு மக்கள் தற்போது பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது தொடர்பில் கருத்து தெரிவிக்காமல் தற்போதைய செயற்பாட்டில் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழியில்லை. எனவே, மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்

மேலும் வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் கிழக்கில் உள்ள முஸ்லிம் மக்களையும் அவர்களின் பிரச்சினைகளில் இருந்து விடுவிப்பது மிகவும் முக்கியமானது. தேசிய சுதந்திரப் போராட்டம் புதிதாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு துன்பப்படும் மக்களின் ஆதரவு தேவை என்றும்

மக்களின் பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதும் அவசியம் எனவும் அதற்கு இளைஞர் ஆற்றலும் வீரியமும் தேவை எனவும் பாராளுமன்ற உறுப்பினர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசியல் செயற்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. கடந்த சில தினங்களில் அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் மற்றும் கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட சம்பவங்கள் என்பன இதற்கு உதாரணமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மக்கள் மீதான வெறுப்பு அரசியல், ராஜபக்ஷவின் அரசியல் கொள்கை மீண்டும் வெளிப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில் புதிய தேசிய சுதந்திரப் போராட்டம் அவசியமானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், மோசடி மற்றும் ஊழலை தடுத்து, சரியான நிர்வாகத்தின் மூலம் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க புதிய சுதந்திர போராட்டத்தை தொடங்க கட்சி தயாராக உள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி