1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கையில் 20 இலட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவசக் காணி உரிமையை வழங்கும் "மரபுரிமை" வேலைத்திட்டம்,

இதுவரை அனுமதிப்பத்திரத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை எதிர்கால பொருளாதாரத்திற்கான மிக முக்கியமான ஜனநாயக முதலீடாகும் என முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்போது படிப்படியாக மீண்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாக உறுமய திட்டத்தை அறிமுகப்படுத்த முடியும் எனவும் முன்னாள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், தம்புளையில் நேற்று (05) இடம்பெற்ற உறுமய தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் கூறியதாவது:

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட காலத்திற்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சி என்றே இதைக் கூறவேண்டும். ஸ்வர்ண பூமி, ஜய பூமி என பல்வேறு பெயர்களில் மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட போதிலும், முறையான பத்திரம் அல்லது இலவசப் பத்திரம் இல்லாத காரணத்தினால் 20 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பல தசாப்தங்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அந்த நிலையில் இருந்து மீள்வதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

“வேலி வைக்க உயிரை மாய்த்துக்கொள்ளும் சகோதரர்கள் தற்றும் அயல்வீட்டார் பற்றி கேள்விப்பட்டிருப்போம். நிலப்பரப்புக்காக நாடுகள் படையெடுப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். நிலம் மற்றும் நிலத்தின் மதிப்பு தான் அதற்குக் காரணம். ஒரு அங்குலம் அல்லது அதற்கு மேற்பட்ட நிலத்தை வைத்திருப்பது அனைவருக்கும் பிடிக்கும். ஏனெனில் நிலம் என்பது, உற்பத்தியின் முக்கிய காரணியாகும். அந்த வகையில் இதுவும் ஒரு சொத்தே. ஆனால் அத்தகைய விஷயம் உரிமத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டால், அதன் உண்மையான மதிப்பை நீங்கள் அனுபவிக்க முடியாது.

“அது சுதந்திரப் பத்திரமாக இருக்கும்போது அதற்கான வாய்ப்பு வருகிறது. அதன் மூலம் மக்களின் தனிப்பட்ட செல்வம் பெருகும். இதுவரை பணம் செலுத்தியிருந்தால், அந்த பணம் சேமிப்பாகக் கருதப்படும்.

“நிலத்திற்கு வங்கிக் கடன் பெற்று, சொத்துக்களை உருவாக்கும் முதலீடாக மாற்றுவது முதல், எந்தப் பொருளாதார நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியும். அதாவது, பொருளாதாரம் என்பது, பரம்பரை மூலம் பில்லியன்களின் மதிப்பைப் பெறுக்குகிறது. இது மிகவும் முக்கியமான விஷயம். ஒருபுறம், 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பல தசாப்தங்களாக எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு உள்ளது. மறுபுறம், எதிர்கால பொருளாதாரத்திற்கான மிக முக்கியமான ஜனநாயக முதலீடாக இதை அறிமுகப்படுத்தலாம்.

“சுதந்திரத்தின் பின்னர், இந்நாட்டு மக்களுக்குக் காணி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக இலவசப் பத்திரம் வழங்கும் முறையான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது மிக முக்கியமான விடயமாகும். ஒரு நிலத்தின் சட்டப்பூர்வ உரிமையைப் பற்றிய கனவு மட்டுமே மக்களுக்கு இருந்தது. வரலாற்றை நினைவு கூர்ந்தால், காலனித்துவ காலத்துக்குப் பிறகு அரசுக்குச் சொந்தமான நிலத்தின் உரிமையை மாற்றுவதற்கான முதல் நடவடிக்கைகள் 1933ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டன. அப்போது, விவசாயத்துறை அமைச்சராக இருந்த டீ.எஸ். சேனாநாயக்கவினால், அரச காணிகளின் உரித்துரிமையை மக்களுக்கு வழங்கும் மின்னேரியா விவசாயிகள் திட்டத்தை, 1934இல் தொடங்கினார். அரசாங்கத்தின் நில உரிமைத் திட்டத்தை விரிவுபடுத்தினார்.

“அதேபோன்று, 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளில் சட்டப்பூர்வ உரிமையை அவர்களுக்கே வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த ஆட்சி இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர், 2015இல் அதிகாரம் கிடைத்தவுடன் அதற்காக செயல்பட்டோம். பட்ஜெட் திட்டங்களில் சேர்த்துக்கொண்டோம். ஆனால், அந்நேரத்திலும் நாட்டின் நிலம் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது என்ற தேசிய பொய்யை நிலைநாட்டி, எதிர்க்கட்சிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. எனவே, இலவச காணி உரித்து பெறும் மக்களின் உரிமை மீறப்பட்டது. உண்மையில் இது அரசியலமைப்புச் சட்டப்படி தவறான செயலாகும்.

“இதன்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளை முன்மொழிந்தார். அதன்படி, “1935ஆம் ஆண்டு காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ், உரிமங்கள் மற்றும் நிபந்தனை மானியங்களின் அடிப்படையில், பாரம்பரிய திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்ட அரச காணிகளின் முழு உரிமை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது, ​​இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய தனியார்மயமாக்கல் இந்த வரவு செலவுத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நாட்டில் தனியார் மயமாக்கலை, பல்வேறு தரப்பினரும் சில காலமாக பலிக்கடா ஆக்கியுள்ளனர். இதைப் பார்த்து அந்தக் கதைகள் அனைத்தும் பொய்யாகிவிடுகின்றன. இதுவரை நம் நாட்டில் காசு கொடுக்கும் அரசியலும் எல்லாவற்றையும் தருவதாக வாக்குறுதி கொடுத்து தேர்தலைப் பெற இலஞ்சம் வாங்கும் கலாச்சாரமும்தான் இருந்தது. அதனால்தான் இந்நாடு, அடிப்படையில் பொருளாதாரப் படுகுழிக்குச் சென்றது. மாறாக, மக்கள் காலூன்றி நிற்கும் வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.

“சொந்த சொத்துக்களுடன் பொருளாதாரத்தில் இணைவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அந்த நிலம் இப்போது முதலீடாக மாறுமா? எப்படி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து நிலையில் உள்ள நிலையில், அதிலிருந்து மீள முடியாமல் திணறி வரும் வேளையில், நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் பாரிய வேலைத்திட்டத்தில் மக்களும் பங்குபற்றுகின்றனர்.

“மேலும், நிலத்தை முறையற்ற முறையில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பதும் அரசியலமைப்புக்கு எதிரானது. அதன்படி, எதிர்காலப் பொருளாதாரத்திற்கான மிக முக்கியமான ஜனநாயக முதலீடாக இதை விவரிக்க முடியும்” என்று, ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.

422629283_350938047828770_8605294719606535303_n.jpeg

 

422464386_350939491161959_5364963046597005230_n.jpeg

 

422462448_350939707828604_8676526347310944737_n.jpeg

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி