1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சட்டவாக்க சபையினால் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு நிறைவேற்று மட்டும் சட்டவாக்க சபைக்கு

இடையில் ஏற்பட்டிருக்கும் மோதலை விரைவில் சுமூக நிலைக்கு கொண்டு வருமாறு சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்துகிறது.

இது தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அரசியல் அமைப்பின் 4(அ) பிரிவின் கீழ் இலங்கை குடியரசின் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களும் அரசியலமைப்பின் 17 வது திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மற்றும் 19, 21 ஆகிய அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக உறுதி செய்யப்பட்ட சட்டவாக்க சபைக்கான அதிகாரம் தொடர்பிலும் கருத்து வேறுபாடுகள் தோற்றுவித்திருப்பதினால் இது போன்ற மோதல் நிலை காணக் கிடைக்கின்றது.

“இதன்போது 17 வது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட்ட அதிகாரங்கள் 18 மற்றும் 20 ஆகிய திருத்தங்களின் ஊடாக வலுவிழக்க செய்து இருந்தாலும், 19 மற்றும் 21 ஆகிய திருத்தங்களின் ஊடாக சட்டவாக்க சபையின் உறுப்பினர்களுக்கு தமது மனசாட்சியுடன், தனித்துவமாக முடிவுகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கி இருப்பதையும் நாங்கள் பெரிதும் நம்புகின்றோம்.

“ஆகையால் நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்து மக்களின் அவிலாஷைகளுக்கு மதிப்பளித்து, இந்த நாட்டின் சிவில் சமூகங்கள் தலைமை தாங்கி, பல்வேறு போராட்டங்களில் ஊடாக வென்றெடுத்த வெற்றிக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய அதே வேலை, எந்த தரப்பும் மோதல்களுக்கும் செல்ல தேவையில்லை என்பதை வலியுறுத்துகிறோம்.

“1999 இடம்பெற்ற உழல் மிக்க வடமேல் மாகாண தேர்தலின் பின், 17ஆவது திருத்தத்தின் ஊடாக சுயாதீன ஆணை குழுவை தாபிப்பதற்கு பங்களிப்பு வழங்கிய முக்கிய சிவில் சமூக அமைப்பு என்ற வகையில் இந்த நெருக்கடி நிலை எமக்கு பாரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

“மேலும் சட்ட வாக்க சபையை அடிப்படையாகக் கொண்டு சுயாதீன ஆணை குழுவை தபிப்பதற்கு காரணமாக அமைந்த விடயங்களையும் நாங்கள் மறந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்துகிறோம்.

“அப்போதைய காலகட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் கூட்டணிக்கு சென்றதும் 17 வது திருத்தத்தின் தேவையை வலியுறுத்தியே. அதன் காரணத்தினால் நாட்டின் நிர்வாகம் குறிப்பிடத்தக்க அளவில் அரசியல் மயமாக்களில் இருந்து விடுபட்டமை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். தேர்தல்கள் ஆணை குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசரை நியமிப்பதற்கு அப்போதைய அரச தலைமை விரும்பாத போதிலும், ஏனைய சுயாதீன ஆணை குழுக்களை நிறுவுவதற்கு அது தடையாக அமையவில்லை. அதன் பலனாக அரச சேவைகள், போலீஸ் போன்ற ஆணைக்குழுகள் உயிர்ப்புடன் இயங்கியதுடன் அழுத்தங்கள் இன்றி தேர்தல்களை நடத்துவதற்கும் வழி உருவாக்கப்பட்டது என்பதை மறக்கக்கூடாது. அப்போதைய தேர்தல் ஆணையாளர் இதனை பகிரங்கமாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

“அதனைத் தொடர்ந்து 18 ஆவது திருத்தத்தை கொண்டு வந்ததன் பின் ஜனநாயகத்திற்கு பாரிய சிக்கல்கள் ஏற்பட்டதுடன் அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையாக ஜனநாயகத்தை மீள் தாவிப்பதற்கு அதி வணக்கத்திற்குரிய மாதுளுவாவே சோபித்த தேரரின் தலைமையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் 2013ல் உருவாக்கப்பட்டது.

“2015ல் 19வது திருத்தத்தின் தோற்றத்துடன் இலங்கை உலக நாடுகளின் மரியாதையைப் பெற்ற முன்மாதிரி நாடாக முன்னோக்கிய பயணத்தை ஆரம்பித்தது.

“இந்த காலகட்டத்தில் அதாவது எட்டாவது பாராளுமன்றத்தின் பல்வேறு காரணங்களுக்காக நிறைவேற்றினால் பரிந்துரைக்கப்பட்ட சில பெயர்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்ததுடன், சில இனக்காடுகள் தாமதமான சந்தர்ப்பங்களும் இருந்தது. பல முக்கிய காரணங்களுக்காகவே அவை அவ்வாறு செய்யப்பட்டது. ஆனாலும் எட்டாவது பாராளுமன்றம் மேற்கொண்ட அனைத்து முடிவுகளும் பூரண இடக்கப்பாட்டுடனே மேற்கொண்டது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

“ஆனால் 2019க்கு பின் கொண்டுவரப்பட்ட 20வது திருத்தத்தின் காரணமாக அங்கீகரிக்கப்பட்ட ஜனநாயக கோட்பாடுகள் அழிக்கப்பட்டதுடன், மீண்டும் 21 வது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை தப்பிப்பதற்கு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் நீதி அமைச்சர் வழங்கிய பங்களிப்பை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம்.

“17ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு பங்களிப்பு வழங்கிய பலர் இன்று உயிருடன் இல்லை. இவற்றுக்காக அவர்கள் வழங்கிய உழைப்பு, நேரம் மற்றும் அறிவின் பங்களிப்பை 23 வருடங்களுக்குப் பின் அழிவுக்கு கொண்டு செல்வதற்கு யாரேனும் முயற்சித்தால் அது கொடிய செயலாகும். நிறைவேற்று மற்றும் சட்டவாக்க சபைக்கு இடையில் எவ்வித மோதல்களும் இடம்பெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நாட்டில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி, பொருளாதார நெருக்கடியை குறைத்துக் கொண்டு, மக்களின் நலனுக்காக முன்னோக்கி செல்லுமாறும், பாரிய அளவிலான கொலைகள், கொள்ளைகள், போதை பாவணையின் பரவல் மற்றும் நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஊழல்களை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். நாடு முகம் கொடுத்திருக்கும் இந்த துர்பாக்கிய நிலையிலிருந்து நாட்டை காப்பதற்கு அதுவே வழியாகும். இது அனைவருக்குமுள்ள கடமையாகும்” என்று, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி