1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தின் பின்னர் வெற்றிடமான புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

பதவிக்கு, வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜகத் பிரியங்கர, சபாநாயகர் முன்னிலையின் இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய எல்.கே.ஜகத் பிரியங்கர, 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்டு 40,527 வாக்குகளை பெற்றிருந்தார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் மரணத்தை தொடர்ந்து அவரது இடத்துக்கு, ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, மரணத்தை ஏற்படுத்திய வீதி விபத்து தொடர்பில் சந்தேகம் நிலவுதாகவும் அது தொடர்பில் விரிவான விசாரணைகளை கோரி அவரின் மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி தற்போது தங்கியுள்ள இல்லத்திற்கு சென்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து இடம்பெற்ற விதம் மற்றும் சாரதியின் நடத்தைகள் தொடர்பிலும் சிக்கல் நிலை காணப்படுவதாக முன்னாள் சனத் நிஷாந்தவின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, தமது கணவரின் மரணம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி