1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்க்கட்சித் தலைவரின் உயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தின் போது கண்ணீர் புகை

குண்டுகள் வீசப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இதேவேளை சஜித் பிரேமதாஸவை இலக்கு வைத்து கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுவதை தான் பார்த்ததாகவும், அதிர்ஷ்டவசமாக புகைக் குண்டானது தனது காலில் விழுந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று (8) நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைத்து அதிபர் ஆற்றிய உரை மீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியின் சிம்மாசன உரையிலிருந்து நாங்கள் எழுந்தோம். எங்கள் ஆதரவு தேவைப்பட்டால், எங்களுக்கு மரியாதை தேவை, எங்களுக்கு அதிகார பரவலாக்கம் வழங்கப்படவில்லை, எங்கள் அமைதியான போராட்டம் தாக்கப்பட்டது.

“தடை செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றோம். எங்களை அடித்து ஆதரவு கேட்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? ஆதரித்தால் நாங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாது. எதிர்க்கட்சிகளின் ஆதரவை இப்படியா கேட்பது?

“ஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாகத் தான் பொருளாதாரப் பிரச்சினைக்கும் அரசியல் பிரச்சினைக்கும் தீர்வினைக் காண முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி