1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான

பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டம் நாட்டிற்கு மிகவும் தேவையானது, இந்த திட்டத்தின் மூலம் குறைந்த விலை மின்சாரத்தை வழங்க முடியும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய நீர்மின் நிலையங்களில் ஒன்றாக உமா ஓயா திட்டத்தின் 120 மெகாவொட் நீர்மின் நிலையம் இம்மாதம் தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணி கூட சாதகமான பங்களிப்பை வழங்கிய ஒரே பெரிய உட்கட்டமைப்பு திட்டமாக இது அமைந்துள்ளது.

உமா ஓயா திட்டத்தை செயல்படுத்துவது இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் என்றும் மஹிந்த ராஜபக்ச அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் கைவிடப்பட்ட பின்னர், மக்கள் விடுதலை முன்னணி உமா ஓயா திட்டத்தை மிகவும் வெளிப்படையாக விமர்சித்திருந்தாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நாடாளுமன்றத்தில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாக மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனவரியில், விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக இருந்த ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவரே உமா ஓயா திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதியைப் பெற்றிருந்ததாக மகிந்த ராஜபக்ஷ அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி