1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சுகாதாரச் சேவைகளுடன் தொடர்புடைய சேவைகளை அத்தியாவசியச் சேவைகளாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி ரணில்

விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலையும் மீறி, 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று புதன்கிழமையும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி, நேற்று காலை 6.30 முதல் முதல், மேற்படி 72 சுகாதாரத் தொழிற்சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி அமைச்சுடன் அண்மையில் கலந்துரையாடப்பட்ட போதிலும் அது தோல்வியில் முடிவடைந்ததாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுவர், புற்றுநோய், சிறுநீரக மற்றும் மகப்பேற்று வைத்தியசாலைகளில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவில்லை.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி