1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய மக்கள் சக்திக்கு பேஸ்புக் மட்டுமே உள்ளது என்றும் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை ஜே.வி.பிக்கு வழங்கும் அளவுக்கு இந்த நாட்டு

மக்கள் முட்டாள்கள் இல்லை எனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் போது அதனை ஒரேயடியாக செய்ய முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (15) மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி முறைமை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு,

“இன்று ஜனாதிபதி முறைமை பற்றி ஒரு கருத்து உள்ளது. ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என நான் நம்புகிறேன். ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதன் மூலம் அதனை திடீரென மாற்ற முடியாது. அப்படியானால், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முறை, நிர்வாக அதிகாரம் எவ்வாறு பரவலாக்கப்படுகிறது, அரசியலமைப்பு ரீதியாக அந்த விவகாரங்கள் மாற்றப்பட வேண்டும்.

“தினமும் சிறு சிறு திருத்தங்களால் ஏற்படும் நம் நாட்டில் நடந்த பிரச்சினை இது. போராட்டத்தின் போது மக்கள் அமைப்பு மாற்றத்தை ஏன் கோரினார்கள்? அமைப்பு மாற்றம் என்பது அரசியல்வாதிகளின் தவறுகள் மட்டுமல்ல. இதைத்தான் திரு.ரணில் விக்கிரமசிங்க இன்று செய்கிறார்.

“பொருளாதார நெருக்கடியை தீர்க்கும், முறைமையை மாற்றக்கூடிய ஒரு தலைவராக நான் திரு ரணில் விக்கிரமசிங்கவை மட்டுமே பார்க்கிறேன் என்று கூறுகிறேன்” என்று, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி