1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான தரத்தில் இலங்கை பின்னோக்கிச் செல்வதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம்

எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி விவகாரங்களில் இலங்கை உரிய தர நிர்ணயங்களை எட்டத் தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல் விவகாரங்களில் நிலவி வரும் குறைபாடுகள் காரணமாக நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமூக நீதி தொடர்பில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

மாறாக மனித உரிமைகள் குறித்த சர்வதேச அவதானத்தை மூடி மறைப்பதற்கு முயற்சிப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விமர்சனங்களை அடக்கவும், அடக்குமுறை சட்டங்களை அறிமுகம் செய்யவும் முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி