1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் யார் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக் கொண்டாலும் எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் வங்குரோத்து நிலையை அடையும் என

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்படும் புள்ளிவிபரத் தகவல்கள் குறித்து விஞ்ஞானபூர்வமான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிழையான தகவல்களை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் தங்களது கணித அறிவினை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை வியட்னாம், பங்களாதேஷ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணங்கள் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணம் அதிகமாக அறவீடு செய்யப்படுவதால் கைத்தொழிற்துறை பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மின்சாரக் கட்டணம் மற்றம் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் 2028ம் ஆண்டில் மீண்டும் நாடு வங்குரோத்து அடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மின்சார சபையின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு மர்மநபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாகவும் ரணவக்க குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கட்சியின் ஆதரவாளர்கள், கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சஜித்தின் இந்த நடவடிக்கை கட்சியை நாளாந்தம் பலவீனப்படுத்துவதாக பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர் இதன் காரணமாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிக மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

எதிர்கட்சி தலைவருக்கு அப்பால் வேறு இருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கட்சி உள்ளது. குறித்த இருவரும் யார் என்பது தொடர்பில் நேரம் வரும் போது தகவல் வெளியிடுவேன்.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது தற்போது குடும்ப வர்த்தகமாக மாறியுள்ளது. கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவுகின்றது. ஜனநாயகம் என்ற எதுவும் கட்சிக்குள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி