1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியது அமைச்சரவையின் கூட்டுக் கருத்தா என நாடாளுமன்ற

உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (20) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கருத்தா அல்லது தனது தனிப்பட்ட கருத்தா என்பதை அமைச்சர் ஹரின் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடு தொடர்பில் இவ்வாறான தனிப்பட்ட கருத்தை கொண்டிருக்க அவருக்கு என்ன உரிமை உள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோர், இதற்கு பதிலளித்தனர்.

“அந்தக் கதையை முழுவதுமாகப் பார்த்தால் என்ன சொன்னது என்பது புரியும். இலங்கைக்கு இடையிலான வரலாற்று உறவைக் காட்டி இலங்கைக்கு வருமாறு இந்தியா அழைத்தது பற்றியே அவர் பேசியுள்ளார்.

“சமூக ஊடகங்களால், வார்த்தைகள் வெட்டப்பட்டும் சேர்க்கப்பட்டும், திரித்து வெளியிடப்பட்டுள்ளன. முழுக்கதையையும் கேட்டால், பிரச்சினையை சரி செய்துவிடலாம். இது, அமைச்சரவையில் விவாதிக்கப்படும் விஷயமல்ல” என்றனர்.

இது தொடர்பா வீடியோ பின்வருமாறு,

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி