1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒற்றையாட்சியை ஒழித்து சமஷ்டி ஆட்சி முறைமையை கொண்டு வந்து இலங்கையை ஐக்கியப்படுத்துவதற்கு எந்தவொரு ஜனாதிபதி

வேட்பாளரும் தயாராக இல்லை எனவும், அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் (20) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“போராட்ட காலப்பகுதியிலே கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக வடக்கு கிழக்கிலே ஒரு நடைமுறை அரசை எமது தேசிய தலைவர் நிறுவியிருந்தார். அங்கே ஒரு பொருளாதார செழுமையை எமது மக்கள் அனுபவித்திருக்கின்றார்கள். அங்கே பொருளாதார ஸ்திரத்தன்மையும் பாதுகாப்பான சூழலிலும் மக்கள் வாழ்ந்த வரலாறு காணப்படுகிறது.

“எமது பிரதேசத்திலே இன அழிப்பை செய்து அந்த பிரதேசத்தை கைப்பற்றிய போது எவ்வளவு பெருந்தொகையான தங்கங்களை கைப்பற்றினீர்கள். அது எவ்வளவு நேர்த்தியாக அந்த வங்கிகளில் பாதுகாக்கப்பட்டது என்பதையும் நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு யுத்த சூழலுக்குள்ளும் எமது தேசம் முழுமையாக வளர்ச்சியடைந்து காணப்பட்டதற்கு அங்கு உண்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தலைவர் அங்கு இருந்தார்.

“ஆனால் நீங்கள் உலக நாடுகளிடமிருந்து பெருந்தொகை நிதிகளைப் பெற்று யுத்தத்தை செய்திருந்தும் கூட யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்தும் கூட நாடு அதளபாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கின்றது என்றால் ஒன்று உங்களின் தலைவரில் நேர்மையில்லை. இரண்டாவது இத் தீவிலே வாழும் அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் மனப்பான்மை உங்களிடம் இல்லை.

“ஆகவே, உங்களுடைய போக்கிலே ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதேவேளை, தமிழர்கள் இந்த தேசத்தை கட்டியெழுப்புவதற்கு தயாராக இருக்கின்றோம். ஆனால் இந்த ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு எங்கள் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட்டு தமிழர் தேசம் சமத்துவமாக சிங்கள தேசத்துடன் வாழக்கூடிய ஒரு சமஸ்டி அரசியலமைப்பை கொண்டுவர நீங்கள் முன்வர வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி