1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதிக்கான விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு

தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி, குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட சரக்கு வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியின் பிரகாரம், இதுவரை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த உளுந்துக்கான விசேட பண்ட வரி, 300 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.

அத்துடன், கௌபி, குரக்கன் மற்றும் குரக்கன் விதை, தினை மற்றும் தினை விதை ஆகியவற்றுக்கு இதுவரை விதிக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராமுக்கான 70 ரூபாய் விசேட பண்ட வரி, 300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், சோளத்துக்கு 25 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சோளம், உளுந்து, பச்சைப் பயறு, கௌபி, குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென, அந்த வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி