1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு வயது சிறுமி உயிரிழந்தமை

குற்றமாக இருந்தால், சத்திர சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட சந்தேகநபர்களை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவல, பொரளை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சிறுநீரக ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் மரணம் கொலை எனவும் சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், ஜனாதிபதியின் சட்டத்தரணி பைசர் முஸ்தபா முன்வைத்த விடயங்களை பரிசீலித்த நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் சந்தேகநபர்களுக்கு எதிராக உடனடியாக சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

பொலிஸாரிடம் ஒரு கேள்வியை முன்வைத்த நீதவான், அது குற்றம் என்று கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டார்.

உண்மைகளை முன்வைத்த பொலிஸார், சிறுமியின் மரணத்தின் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் வைத்தியர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

நீதவான்: இந்த நாட்டில் குற்றம் செய்துவிட்டு வெளிநாட்டில் இருக்க முடியுமா?

பொலிஸார்: நீதிமன்ற உத்தரவுப்படி உடனடி நடவடிக்கை எடுக்கலாம் நீதவான் அவர்களே.

நீதவான்: சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவும், பொலிஸாருக்கு நீதிமன்ற உத்தரவு தேவையில்லை. மருத்துவர் இப்போது இருக்கும் நாடு உங்களுக்குத் தெரிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்து, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். உடனடியாக உத்தரவு பிறப்பிக்கிறேன். தற்போது, ​​பிரேத பரிசோதனை நடக்கிறது. அந்த பிரேத பரிசோதனைக்கும் இந்த மருத்துவர் தேவைதானே? என்று, நீதவான் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதவான், உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என பொலிஸாருக்கு அறிவித்தார்.

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வசிக்கும் தம்பதியரின் குழுந்தையான ஃபஸ்லீம் என்ற இரண்டு வயது சிறுமியின் இடது சிறுநீரகம் செயலற்ற நிலையில், அதனை அகற்றும் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு 6 மாதங்களின் பின்னர், அச்சிறுமியின் வலது சிறுநீரகம் இல்லாத நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொரளை பொலிஸ் உதவிப் பரிசோதகர் எம்.வி.தயாசிறி, வழக்குத் தொடரில் உண்மைகளை முன்வைத்தார்.

டிசம்பர் 22, 2022 அன்று, இடது சிறுநீரகத்தின் சிக்கலால் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது செயல்படாத நிலையில் இருந்ததால், அறுவை சிகிச்சை நிபுணர் ஹரின் விஜயகோன் அதற்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, குறித்த சிறுமியின் ஒரு சிறுநீரகத்தை அகற்றவே சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் வைத்தியசாலையில் 7 மாதங்களாக சிகிச்சை பெற்ற சிறுமி உயிரிழந்தபோது, இரண்டு சிறுநீரகங்களையும் அவர் இழந்திருந்ததாகவும், அந்த சத்திர சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கிய மேற்படி வைத்தியசாலையின் வார்ட்டுக்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் வைத்தியர் கால்லகே, கடந்த வழக்குத் தவணையின்போது சாட்சியமளித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சார்பில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர் யூசுப் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி