1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

யுக்திய நடவடிக்கையானது சர்வதேச அழுத்தங்கள் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின்

ஆதரவுடன் தடையின்றி தொடருமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை எந்தவொரு காரணத்துக்காகவும் இடைநிறுத்தப்படாது என அவர் கூறியுள்ளார்.

பண்டாரவளை சமூக பொலிஸ் பிரிவினருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் காலத்தில், இலங்கை மக்களுக்கான தனது கடமைகளை சரிவர நிறைவேற்றுவதாகவும் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார்.

சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காக தான் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குற்றக் கும்பல்களை ஒழிப்பதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒன்றரை மாதங்களுக்குள் ஹெரோயின், ஐஸ் மற்றும் ஏனைய ஆபத்தான போதைப்பொருட்களை பொலிஸாரால் ஒழிக்க முடியும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி