1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஜெனீவா நேரப்படி, இன்று (26) முற்பகல் 9.30

மணியளவில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தொடரானது, இன்று தொடக்கம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதுடன், 110க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பிரதிநிதிகளும் இதன்போது உரையாற்றவுள்ளனர்.

மேலும், இப்பேரவையின் 55ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பிலும் பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீளாய்வு வாய்மொழி மூலமாக எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

அத்தோடு, அன்றைய தினம் கொலம்பியா, குவாட்டமாலா, ஹொண்டுராஸ், சைப்பிரஸ், நிக்காராகுவா உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி