1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில்

சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கு ஒன்றிற்காக நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்திருந்த அவர்,  வழக்கு முடிவடைந்ததையடுத்து, நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று மாலை திடீரென உடல்நிலை பாதிப்படைந்து, அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்து, சிகிச்சை பெற்றுவந்தமை குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை குறித்து அறியத்தருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி