1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தாம் விடுத்த கோரிக்கைகளை

இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகவும் கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் தொடர்பாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழிமூல அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான வெளிப்படையான சுயாதீனமான பொறிமுறையின்மை குறித்து நாங்கள் தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளோம்.

அடுத்த மாதம் 21ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்கள் நிறைவடைகின்றது. தாக்குதலில் பின்னர் நாட்டை ஆண்ட அரசாங்கங்கள், பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்தன.

ஆனால், இந்த விசாரணைகள் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் குறித்த அனைத்து விபரங்களையும் ஆராயவில்லை. புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி