1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது, நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தற்போது விசேட உரையொன்றை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி கூறியதாவது,

“புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும். அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப்போவதில்லை.

“வெளிநாட்டு அரச முறை கடன்கள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும் என்றும் 2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு கடன் செலுத்தலுக்காக காலவகாசம் பெற்றுக் கொள்ளப்படும்.

“அத்துடன், இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளன. இதேவேளை, ஒரு தரப்பினர் அதிகாரத்துக்காக பொய்யுரைக்கிறார்கள். நான் அதிகாரத்துக்காக செயல்படவில்லை. என்றும் நாட்டுக்காகவே செயற்படுகிறேன்.

“அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது. கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும். நாடு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் சிலர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர்.

“பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், அதனை மக்களிடம் காட்டவில்லை என சிலர் குற்றம் சுமத்துகின்றனர். மக்கள் மீது தேவையில்லாமல் வரி விதிப்பதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

“மேலும் மின்சாரக் கட்டணம், எரிபொருள் கட்டணங்கள் தேவைக்கு அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். பொதுவாக மக்களின் வரிப் பணத்தை பூ பறிப்பது போல் வசூலிக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஆனால் அந்த நடைமுறையை நாங்கள் பின்பற்றவில்லை என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் அந்த விமர்சகர்கள் மறந்துவிடும் விடயமொன்று உள்ளது. பூக்களை பறித்து தேன் எடுக்கும் சந்தர்நேரங்களும் உண்டு. இது நமக்கு அருமையான பாடம். சாதாரண நிலையில், பூக்களை நசுக்காமல் தேன் எடுக்க முடியும், ஆனால் நீங்கள் நடுவில் செல்லும்போது அவ்வாறு செய்ய முடியாது. அங்கு நிலைமை வேறு. இன்று நாம் நடுப்பகுதிக்கே சென்றிருக்கிறோம்” என்றார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி