1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஈசனை கண் விழித்து வணங்கும் மகா சிவராத்திரி நாளில் இந்த ஆண்டு 300 வருடங்களுக்குப் பிறகு அபூர்வ யோகங்கள் கூடி வருகின்றன.

இந்த ஆண்டு மகா சிவராத்திரி நாளில் சிவ ஆலயம் சென்று வணங்குவதோடு அபிஷேகத்திற்கு என்னென்ன வாங்கி கொடுக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

இந்த ஆண்டு மார்ச் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை (இன்று), மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.

ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள். ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி ஸித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது.

சரவண எனும் திருவோண நட்சத்திரம். மகர ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் கண்களில் காணும் போதும் மூன்று பாதங்கள் போலவும், அம்பு போலவும், அன்னப்பறவை போலவும், முழக்கோல் போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக மூன்று பாதங்கள், அம்பு, அன்னப்பறவை, முழக்கோல் காணப்படும் ஆகியவை கூறலாம். இதன் அதிபதி சந்திரன் கிரகம் ஆகும். இது மஞ்சள் நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது சிறப்பானது.

இந்த மகா சிவராத்திரி நாளை தவற விடக்கூடாது. மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் சேரும்.

மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும். வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், வியாபார விருத்தி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வ செழிப்பு உண்டாகும்.

சர்வார்த்த ஸித்தி யோகம் என்றால் உங்களுடைய எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றி வைக்கும் யோகம். இந்த யோக நாளில் ஈசனை மனம் உருகி வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும். சுபகாரியத் தடைகள் அகன்று நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். மகா சிவராத்திரி நாளன்று முழுவதுமாக சிவ யோகம் எனும் அற்புத வேளை கூடி வருகின்றது. இந்த மகா சிவராத்திரி நாளில் சிவ பெருமானை மட்டுமல்லாது பெருமாளையும் சனி பகவானையும், அவரை வழிநடத்தும் ஈசனையும் வழிபட்டால் தொழில், வியாபாரம், பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ஜாதகத்தில் உள்ள எல்லா விதமான நவகிரக தோஷங்களும் நீங்கும்.

மகா சிவராத்திரி இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வருவதால் சுக்கிர பிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் ஈசனுக்கு விரதம் இருந்து வழிபட்டால் நீங்காத துன்பம், தீராத வியாதிகள், குறையாத கடன்கள், அனைத்தும் தீர்ந்து விடும். குடும்ப ஒற்றுமை மேலோங்கி வாழ்வில் இனிமையும், மகிழ்ச்சியும் நீடிக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள். ஐந்து யோகங்களும் ஒன்று கூடும் இந்த அபூர்வ மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்யத் தவறாதீர்கள்.

சிவபெருமானுக்கு பிரியமானது வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூஜை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும். மகா சிவராத்திரி நாளில் சிவ ஆலயத்திற்கு வில்வம் வாங்கித்தர மறக்காதீர்கள். சிவ ராத்திரி நாளில் சிவபெருமானை தயிர் கொண்டு அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை அதிகமாகும். பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் சொர்க்க வாழ்வு கிடைக்கும். அரிசிமாவு வாங்கிக் கொடுத்தால் தீராத கடன்களும் தீரும். அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி