1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம், எதிர்வரும் 19ஆம் திகதி

இடம்பெறவுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற பிரதிச் செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்னவிடம் கையளித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், இதற்கான விரைவான விவாதத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, ஐந்து நாட்களுக்குப் பிறகு நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிகழ்ச்சி நிரலில் போட்டு விவாதம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் குழுவின் அடிப்படையில், எதிர்வரும் 19ஆம் திகதி இந்த விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இதற்காக எதிர்க்கட்சிகளினால் இரண்டு நாட்கள் கோரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி